1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : திங்கள், 3 டிசம்பர் 2018 (08:41 IST)

கும்ப்மேளா கொண்டாட்டம் – மக்களுக்குத் திண்டாட்டம்!

உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத்தில், அடுத்த ஆண்டின் முதல் மூன்று மாதங்களுக்குத் திருமணங்களுக்கு தடை விதித்து அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா விழா நடைபெறுவது வழக்கம். அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 4 ஆம் தேதி வரை 50 நாட்கள் நடைபெற இருக்கிறது. இதற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் சேர்ந்து மொத்தமாக 2500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளனர்.

இந்த விழாவுக்காக அலகாபாத் வரும் மக்கள் அங்குள்ள திருமண மண்டபங்களில் தங்கி செல்வது வழக்கம். அதனால் கும்பமேளா நேரத்தில் திருமணங்கள் நடந்தால் வரும் பக்தர்களுக்கு தங்க இடம் கிடைக்காது என்கிற காரணத்தால் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை திருமணங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்காக யோகி அரசு மாவட்ட நிர்வாகம் மூலம் திருமண மண்டபங்களுக்கு அரசாணை மூலம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே முன்பதிவு செய்தவர்களின் தேதிகளையும் ரத்து செய்யக்கோரி உத்தரவிட்டுள்ளது.