Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

தே‌ங்கா‌யை உரு‌ட்‌டி வ‌ழிபடுவது எத‌ற்காக?

Widgets Magazine

த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: சபரி மலையிலும், மற்ற சில கோயில்களிலும் தேங்காயை உருட்டிச் சென்று வழிபடும் முறை உள்ளது. எதற்காக?

ஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: தேங்காய் என்பது ஒரு மிகப்பெரிய சக்தி. தேங்காய், எலுமிச்சைப் பழம், பூசணிக்காய் போன்றவை பலி கொடுக்கக்கூடிய பொருட்கள். உயிருள்ளவைகளைதான் நாம் பலிகொடுக்க முடியும். அதனால்தான் எலுமிச்சை கனியை புதிய வாகனத்தினுடைய சக்கரத்தில் வைத்து பலி கொடுப்போம். அதேபோல பூசணிக்காயையும் பலி கொடுப்போம்.

தேங்காய்க்கு வேண்டுதல்கள், நம்முடைய எதிர்மறை எண்ணங்கள் இதையெல்லாம் உள்வாங்கக்கூடிய சக்தி உண்டு. அதனால்தான் பிரம்மதூபமாக தேங்காயைப் பார்க்கிறார்கள். சில நூல்கள் பிரம்மனுடைய அம்சம் என்று தேங்காயைச் சொல்கிறது. பிரம்மனுக்கு முக்கண், அதாவது மூன்று கண் இருப்பது போல, தேங்காய்க்கும் மூன்று கண்கள் இருக்கிறது. பெரிய பெரிய தோஷங்களெல்லாம் நீங்க வேண்டுமென்றால் தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியில் நெய்யோ அல்லது நல்லெண்ணெயோ விட்டு அதில் திரி போட்டு ஏற்றினால் பெரிய பெரிய தோஷங்கள் எல்லாம் நீங்கும் என்று சில நூல்கள் சொல்கிறது.

தேங்காயை, நாம் என்ன நினைத்து உருட்டிக் கொண்டு போய் விடுகிறோமோ அது நிறைவேறும். எண்ண ஓட்டங்களை நாம் அந்த தேங்காய்க்குள் திணிக்கிறோம். மாங்காய்க்குள் நாம் திணிக்க முடியாது. ஏனென்றால் மாங்காய்க்கு அந்தச் சக்தி கிடையாது. தேங்காய்க்கு அந்த அபூர்வ சக்தி உள்ளது. அதன் மூலமாக அதை நாம் செய்யும் போது, நம்முடைய வேண்டுதல்கள் நிறைவேறும். அதனால்தான் தேங்காய் முக்கியப் பொருளாக இருக்கிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine

‌ஜோதிட ரத்னா முனைவர் கே.பி. வி‌த்யாதர‌ன்!

ஜோ‌திட‌த்‌தி‌ன் வா‌யிலாக சமூக, அர‌சிய‌ல், பொருளாதார போ‌க்குகளை து‌ல்‌லியமாக மு‌‌ன் ...

7, 16, 25

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் காசு, பணம் புரளும் என்றாலும் ...

8, 17, 26

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் மகிழ்ச்சி தங்கும்.

9, 18, 27

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் சோர்வு நீங்கும்.

Widgets Magazine Widgets Magazine