வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Updated : வியாழன், 19 மே 2016 (07:47 IST)

தமிழக சட்டசபை தேர்தல் : இன்று காலை முடிவுகள் வெளியாகிறது

தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 


 
 
65 ஆயிரத்து 762 வாக்குச்சாவடிகளில் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 596 வாக்குப்பதிவு எந்திரங்களும், 75 ஆயிரத்து 980 கட்டுப்பாட்டு எந்திரங்களும் பயன்படுத்தப்பட்டன.
 
மொத்தம் 74 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல ஆணையம் தெரிவித்துள்ளது. 
 
இந்நிலையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை முதல் தொடங்குகிறது.  முதலில் தபால் ஓட்டுகள் எட்டு மணிக்கு எண்ணப்பட்டன. அதன்பின், மற்ற வாக்குகள் எண்ணப்படுகின்றன. மொத்தம் 68 வாக்கு எண்ணிக்கை மையங்களில் வாக்குகள் எண்ணபப்டுகிறது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் யார் ஆட்சியை பிடிக்க இருக்கிறார்கள் என்பது இன்று மாலை தெரிந்துவிடும்.

அதேபோல், கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களிலும் இன்று சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிறது.