திமுகவிற்கு தாவிய மக்கள் தேமுதிக அணிக்கு 3 தொகுதிகள்?


Murugan| Last Modified செவ்வாய், 12 ஏப்ரல் 2016 (14:15 IST)
தேமுதிகவிலிருந்து விலகி திமுகவில் இணைந்த மக்கள் தேமுதிகவிற்கு மொத்தம் மூன்று தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 
மக்கள் நலக் கூட்டணியுடன், தேமுதிக கூட்டணி சேர்ந்தது தவறு என்றும், திமுகவுடன் கூட்டணி வைப்பதே சிறந்தது என்று குரல் எழுப்பி, தேமுதிக முன்னாள் கொள்கை பரப்புச் செயலாளர் சந்திரகுமார், எஸ்.ஆர். பார்த்தீபன், சி.எச்.சேகர் மற்றும் சில நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகி, மக்கள் தேமுதிக என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ளனர்.
 
எதிர்பார்த்தது போலவே, திமுகவிலிருந்து அழைப்பு வர, அவர்கள் நேற்று திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக பொருளாலர் ஸ்டாலினை நேற்று சந்தித்து பேசினர். 
 
அப்போது அவர்கள் தங்களுக்கு அங்கீகாரம் அளிக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு கருணாநிதி  “என்னை நம்பி வந்து விட்டீர்கள்.  உங்களை கை விட மாட்டேன்” என்று கூறியதோடு, அவர்கள் தேமுதிகவில் ஏற்கனவே வெற்றி பெற்ற தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
மக்கள் தேமுதிகவை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏக்களும், உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட வாய்ப்பிருப்பதாகவும், அதுபற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது.இதில் மேலும் படிக்கவும் :