1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By சி.ஆனந்தகுமார்
Last Modified: திங்கள், 11 ஏப்ரல் 2016 (18:36 IST)

இலவச செல்போன்கள் எல்லாம் யார் கேட்டார்கள்: தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் கடும் சாடல்

தி.மு.க தேர்தல் அறிக்கை குறித்து தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் செ.நல்லசாமி வெளிட்ட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


 

தி.மு.க தேர்தல் அறிக்கையை கூட்டி கழித்து எடை போட்டு பார்த்தால் நன்மை குறைவாகவும், தீமைகள் அதிகமாகவும் உள்ளது. இதை இரண்டையும் போல, டாஸ்மாக் மதுகடைகளை மூடவும், லோக் ஆயுக்தா கொண்டு வரவும், தொழிற்சாலைகளுக்கு கொடுப்பது போல, விவசாயத்திற்கு மும்முறை மின்சாரம் கொடுப்பது என்பது போல அதையெல்லாம் வரவேற்கிறேன். இதையும் வரவேற்கிறோம், விவசாயத்திற்கு தனியாக பட்ஜெட் என்று சொல்லி இருக்கிறார்கள் அதையும் ஏற்றுக் கொள்கிறோம், அது போக விவசாயிகளுக்கு ஆண்டு தோறும், வேஷ்டி, உடைகளையும் ரூ ஐந்நூறு ரூபாய் கொடுக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள். பொதுவாக இறந்து போனதான் கோடி போடுகிறார்கள். நெற்றியில் ஒரு ரூபாய் வைப்பார்கள். அப்படி தான் உள்ளது ஐந்நூறு ரூபாய் கொடுப்பது. விவசாயிகளாகிய நாங்கள் பிச்சை எடுப்பவர்கள் அல்ல, அரசு ஊழியர்களுக்கு எப்படி தேர்தல் கமிஷன் படி பரிந்துரையின் படி சம்பளம் தருகீறீர்களோ, அது போல,விவசாயிகள் கமிஷன் பரிந்துரையை ஏற்று எங்களுக்கு சலுகைகளை கொடுங்கள் இலவசங்கள் வேண்டாம்.

நாங்கள் கேட்பது ஒன்று கிடைப்பது, விலை நிர்ணயம் செய்து கொடுங்கள். ஒன்று இவர்கள் எல்லாம் பக்கவாத்தியங்களை கொண்டு தான் தூரியாடிக்கொண்டிருக்கிறார்கள். அது போக இலவச சொல் போன் கொடுப்பதாக சொல்கிறீர்கள். அதையெல்லாம் யார் கேட்டார்கள். இரு கட்சிகளும் கள் குறித்தும் கள் இறக்குவது குறித்தும் பேச்சே இல்லை என்று குற்றம் சாட்டினார். இல்லாதை கொடுக்க முன்வரவேண்டுமே தவிர இலவச செல்போன், இலவச தொலைக்காட்சி பெட்டி, இலவச கிரைண்டர், இலவச பேன்கள் தேவையில்லை. விவசாயிகளின் விளை பொருட்களை சந்தைபடுத்த அரசு முன்வர வேண்டும், விவசாய பொருட்களுக்கு ஒரு தர நிர்ண்யம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.