செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Bala
Last Updated : திங்கள், 11 ஏப்ரல் 2016 (18:17 IST)

இந்திய கிறிஸ்தவர் முன்னனி 80இடங்களில் தனித்து போட்டி - எம்.எல்.சுந்தரம்

வருகின்ற 2016 தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி  சட்டமன்றத்  தேர்தலில், இந்திய கிறிஸ்தவர் முன்னணி 80 இடங்களில் தனித்து போட்டியிடுகின்றது. முதல்கட்டமாக , வருகின்ற ஏப்ரல் 15 -ஆம் தேதி, தமிழகத்தில் கிறிஸ்தவர் அதிகம் வாழும் 34தொகுதிகளிலும், பாண்டிச்சேரியில் கிறிஸ்தவர் அதிகம் வாழும்12 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவுள்ளனர்.


 

இது தொடர்பாக இந்திய கிறிஸ்தவர் முன்னணியின் தலைவர் எம்.எல்.சுந்தரம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறியதாவது :

எதிர்வரும் 2016 சட்டமன்ற தேர்தலில்,தமிழகத்தில் களம் காணும் எந்தவொரு பிரதானக் கூட்டணியும் கிறிஸ்தவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப கவுரவமான தொகுதிகளை ஒதுக்க முன்வரவில்லை.கடந்துவந்த தேர்தல்களில் கிறிஸ்தவர்களை வெறுமனே வாக்கு வங்கியாகப் பயன்படுத்திக்கொண்டு, பின்னர் தூக்கி எறிந்துவிடுகின்றனர். எனவே இம்முறை இந்தியகிறிஸ்தவர் முன்னணி' 80  இடங்களில் (தமிழகம்  மற்றும் புதுவை) தனித்து போட்டியிடுகின்றது. வருகின்ற ஏப்ரல் 15ஆம்  தேதி, முதல்கட்டவேட்பாளர்பட்டியல் வெளியிடப்படும் அத்துடன்தேர்தல்சின்னமும் அறிமுகப்படுத்தப்படும் " எனத் தெரிவித்துள்ளார் .