துரோகம் செய்யவில்லை: ஜெயலலிதாவுக்கு ரங்கசாமி பதிலடி

துரோகம் செய்யவில்லை: ஜெயலலிதாவுக்கு ரங்கசாமி பதிலடி


K.N.Vadivel|
கூட்டணி தர்மத்திற்கு துரோகம் செய்யவில்லை. மாறாக எம்பி பதவியை அதிமுகவுக்கு வழங்கி உள்ளதாக புதுவை முதல்வர் ரங்சாமி ஜெயலலிதாவுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
 
 
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரியிலும் மமே 16 ஆம் தேதி சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், புதுவை முதல்வரும், என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவருமான ரங்கசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், புதுவையில், தனித்து ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த முறையும் தனித்து போட்டியிடுகிறோம். எனவே, புதுவையில் நமது ஆட்சி நிச்சயம்.
 
நமக்கு மத்திய அரசு போதிய நிதி உதவிகள் செய்யவில்லை என்றாலும், இதுவரை புதுவை மக்களுக்கு கொடுத்த அனைத்து தேர்தல் வாக்குறுதிகளையும் நிறைவேற்றிவிட்டோம்.
 
இது புதுவை மக்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி. எனவே, மக்களுக்காக, புதுவையிலே முடிவு எடுக்கப்படும். மற்றவர்கள் போல டெல்லியிலும் , சென்னையிலம் முடிவு எடுக்கும் ஆட்சி அல்ல.
 
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டோம். நமக்கு 15 இடங்கள் கிடைத்ததால் தனித்து ஆட்சி அமைத்தோம். அதிமுகவுக்கு நாம் எந்த துரோகமும் செய்யவில்லை. மாறாக, கூட்டணி தர்மத்துக்காகவே எம்பி பதவியை மனதார வழங்கினோம் என்றார்.
 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :