செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Murugan
Last Modified: புதன், 11 மே 2016 (08:47 IST)

ஓட்டுப் போட பூத் ஸ்லிப் வாங்கிட்டீங்களா? : இன்றே கடைசி நாள்

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க,  பூத் ஸ்லிப்பை (வாக்குசாவடி சீட்டு) பெற இன்றே கடைசி நாள் என்றும், அதன்பின் வழங்கப்படாது என்றும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.


 

 
இதுபற்றி கருத்து தெரிவித்த ராஜேஷ் லக்கானி “வாக்காளர் பட்டியலில் உள்ள பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, வீடு வீடாக சென்று பூத் ஸ்லிப்புகள் வழங்கும் பணி மே 5ல் தொடங்கப்பட்டது. பூட்டியிருந்த வீடுகளில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்படவில்லை.
 
அப்படி விடுபட்டவர்களுக்கு, தேர்தல் அன்று வாக்குச் சாவடிகளில் பூத் ஸ்லிப் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், யாரும் பெறாத அந்த சீட்டுகளை பயன்படுத்தி ஏராளமான கள்ள ஓட்டு போடப்படுவதாக, இதற்கு முன் நடைபெற்ற தேர்தல்களில் புகார்கள் எழுந்தன. அதனால், வாக்குச் சாவடிகளில் பூத் ஸ்லிப்புகள் வழங்கப்பட மாட்டாது.
 
பூத் ஸ்லிப் வாங்க இன்றே கடைசி நாள். அப்படி பெறப்படாத பூத் ஸ்லிப்புகளை சீல் வைத்து பாதுகாப்பாக வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.