வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (09:02 IST)

தமிழகம் முழுவதும் 6,812 பேர் வேட்பு மனு தாக்கல்: இன்று பரிசீலனை

தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட 6,812 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.


 

 
234 உறுப்பினர்களை கொண்ட தமிழக சட்டசபைக்கு வருகிற மே 16 ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக, தேமுதிக-மக்கள் நல கூட்டணி-தமாகா, பாட்டாளி மக்கள் கட்சி, பாஜக ஆகிய 5 முக்கிய அணிகள் போட்டியிடுகின்றன. அத்துடன், சீமானின் நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
 
 
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 22 ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய நேற்று கடைசி நாள். நேற்று பிற்பகல் 3 மணியுடன் மனுதாக்கல் நேரம் முடிவடைந்தது.
 
இந்நிலையில், தமிழகத்திலுள்ள மொத்த 234 தொகுதிகளிலும் 6,812 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதன் இறுதி நாளான நேற்று மட்டும் 2,669 பேர் மனு தாக்கல் செய்தனர்.
 
இவர்களுள் 6,054 பேர் ஆண்கள், 756 பேர் பெண்கள். திருநங்கைகள் இருவர் மனுதாக்கல் செய்துள்ளனர். இதில் ஒரு சிலர் தங்கள் பெயரில் ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
 
இந்நிலையில், வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஏப்ரல் 30) நடைபெறும். அப்போது குறைபாடுள்ள மனுக் கள் தள்ளுபடி செய்யப்படும்.
 
வேட்பு மனுக்களை வாபஸ் பெற மே 2 ஆம் தேதி கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.