பிரியங்கா சோப்ராவின் ‘குவாண்டிகோ’ - டிரெய்லர்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 14 மே 2015 (18:10 IST)
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடிக்கும் ‘குவாண்டிகோ’ என்ற அமெரிக்க சீரியலின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
 
பிரபல பாலிவுட் நடிகை, பிரியங்கா சோப்ரா 'குவாண்டிகோ' என்ற அமெரிக்க தொலைக்காட்சி நெடுந்தொடர் ஒன்றில் நாயகியாக நடித்து வருகிறார். இது அமெரிக்க புலனாய்வு அமைப்பான, எஃப்.பி.ஐ. பற்றிய கதையம்சம் உடையது.
 
 
மேலும் நியூயார்க் நடைபெற்ற இரட்டைக் கோபுர தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த தொலைக்காட்சி தொடரில் பிரியங்கா சோப்ரா எஃப்.பி.ஐ. அதிகாரியாக ஆவதற்கு பயிற்சி பெறும் பெண்ணாக நடிக்கிறார். இந்த தொடரை ஏ.பி.சி., ஸ்டூடியோ நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் ட்ரெய்லரே மிகப் பிரமாண்டமான அளவில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வீடியோ கீழே:
 


இதில் மேலும் படிக்கவும் :