வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Annakannan
Last Updated : வியாழன், 27 நவம்பர் 2014 (12:32 IST)

குபீர் சிரிப்புடன் 'நண்பேன்டா' படத்தின் டீஸர்

உதயநிதி, நயன்தாரா, சந்தானம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாக உள்ள நண்பேன்டா படத்தின் டீஸர், நவம்பர் 26 அன்று யூடியூபில் வெளியானது.

 
இது கதிர்வேலன் காதல் படத்தைத் தொடர்ந்து நயன்தாரா, உதயநிதி இணைந்து நடித்திருக்கும் படம் நண்பேன்டா. கும்பகோணத்தில் இதன் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் போதுதான் உதயநிதி நயன்தாராவை ஒருதலையாகக் காதலிப்பதாகவும், நயன்தாரா அந்தக் காதலை மறுத்ததால் உதயநிதி உடைந்து போனதாகவும் கிசுகிசு எழுந்தது. 
 
இந்த வதந்திக்குச் சில தினங்கள் கழித்து பாடல் காட்சிக்காக பழைய கலகலப்புடன் உதயநிதியும் நயன்தாராவும் பட யூனிட்டுடன் வெளிநாடு கிளம்பிச் சென்றனர்.
 
அறிமுக இயக்குநர் ஜெகதீஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். 
 
உதயநிதி, நயன்தாரா உள்பட, ஒவ்வொரு நட்சத்திரமும் குபீரெனச் சிரிக்கும் கண்கொள்ளாக் காட்சியை இந்த டீஸரில் கண்டு களியுங்கள்.