வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 13 ஜூன் 2015 (21:59 IST)

இளையராஜா வெளியிட்ட ’ருத்ரமாதேவி’ தமிழ் ட்ரெய்லர்

ருத்ரமாதேவி படத்தின் தமிழ் ட்ரெய்லரை வெள்ளிக்கிழமை இசையமைப்பாளர் இளையராஜா வெளியிட்டுள்ளார்.
 

 
இந்தியாவின் முதல் ஸ்டீரியோஸ்கோப் 3 டி சரித்திரப் படமாக ருத்ரமாதேவி உருவாகியுள்ளது. அணுஷ்கா, ராணா டாகுபதி, அல்லு அர்ஜூன், நித்யா மேனன், கேத்ரினா தெரசா உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படம் வரும் ஜூன் 26ஆம் தேதி உலகெங்கும் வெளியாகிறது.
 
குணசேகர் இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் - தெலுங்கில் நேரடிப் படமாக உருவாகியுள்ளது. மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகிறது. காகதீய வம்சத்தைச் சேர்ந்த பெரும் அரசியான ருத்ரமா தேவியின் வாழ்க்கை வரலாறுதான் இந்தப் படம். பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள ருத்ரமாதேவி படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.
 
லண்டனின் இந்தப் படத்துக்கு சிம்பொனி ஆர்கெஸ்ட்ரா வைத்து பின்னணி இசையை சேர்த்துள்ளார். இந்தப் படத்தின் ட்ரெய்லரை நேற்று வெள்ளிக்கிழமை தனது இசைக் கூடமான பிரசாத் லேபில் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் படத்தின் தமிழ் தயாரிப்பாளரான தேனாண்டாள் பிலிம்ஸ் ராமசாமி, இயக்குநர் குணசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வீடியோ வீழே: