வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By Annakannan
Last Updated : வெள்ளி, 21 நவம்பர் 2014 (13:10 IST)

மிரட்டலான மீகாமன் - டிரெய்லர்

மீகாமன் என்றால் மாலுமி, கேப்டன் ஆஃப் தி ஷிப் என்று பொருள். மகிழ்திருமேனி இயக்கத்தில், ஆர்யா - ஹன்சிகா இணைந்து நடிக்கும் மீகாமன், ஸ்டைலிஷான ஆக்ஷன் படமாக உருவாகியுள்ளது. ஆக்ஷன் படம் என்பதால் படத்தில் இரண்டேயிரண்டு பாடல்கள்தான். தமன் இசையமைக்க மதன் கார்க்கி இரு பாடல்களையும் எழுதியுள்ளார். 

மீகாமன் படத்தின் டிரெய்லர், 2014 நவம்பர் 20ஆம் தேதி வெளியானது. படத்தின் கதையை யூகிக்கும்படி இந்த டிரெய்லர் அமைந்துள்ளது. ஆயிரம் கிலோ போதை மருந்தை மையமாக வைத்துக் கதை பின்னப்பட்டுள்ளது. வலி கொடுத்தவனுக்கே அந்த வலியைத் திருப்பிக் கொடு என ஆர்யா, பஞ்ச் டயலாக் பேசுகிறார். ஹன்சிகாவும் காதல் அத்தியாயமும் வெளிப்படுகிறது. ரெண்டு நிமிட டிரெய்லரில் ரெண்டு மணி நேரப் படத்தையும் சுருக்கி அளித்துள்ளதைப் பாராட்டலாம். கிரைம் கமர்ஷியல் மசாலாவாக மிரட்டும் மீகாமன் டிரெய்லர் இங்கே: