1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: சனி, 23 ஆகஸ்ட் 2014 (18:04 IST)

வில்லனுக்கு பிறகுதான் விஸ்வரூபம் 2 - மீண்டும் உறுதிப்படுத்திய கமல்

உத்தம வில்லன் படத்துக்குப் பிறகே விஸ்வரூபம் 2 வெளியாகும் என்பதை மீண்டும் ஒருமுறை உறுதி செய்தார் கமல்.
 
விஸ்வரூபம் எடுக்கும் போதே அதன் இரண்டாம் பாகத்துக்கான பெருமளவு காட்சிகளை படமாக்கினார் கமல். அதனால் இரண்டாவது பாகம் உடனே வெளியாகும் என எதிர்பார்த்தனர். மாறாக விஸ்வரூபம் 2-க்காக ரிஸ்க்கான பல சண்டைக் காட்சிகளை கமல் படமாக்கினார். முக்கியமாக தண்ணீருக்கடியில் எடுக்கப்பட்ட சண்டைக் காட்சிகள்.
 
மேலும், படத்தில் ஸீஜி வேலைகள் அதிகம் உள்ளன. அதனால் விஸ்வரூபம் 2 வெளியாக இன்னும் காலம் பிடிக்கும் என தெரிவித்த கமல், உத்தம வில்லனுக்குப் பிறகே விஸ்வரூபம் 2 வெளியாகும் என்றார்.
 
அதேநேரம் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்கான பாபநாசத்தின் நடிகர்கள் தேர்வு முடிந்த நிலையில் செப்டம்பர் முதல் வாரத்தில் பாபநாசத்தின் படப்பிடிப்பை தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.