வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: புதன், 23 ஜூலை 2014 (11:13 IST)

விஜய்யின் கத்தியை எதிர்ப்போம் - முற்போக்கு மாணவர் முன்னணி

விஜய்யின் கத்தி திரைப்படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம், திரையரங்குகளுக்கு சென்று கத்தியை திரையிடக் கூடாது என கேட்க உள்ளோம் என முற்போக்கு மாணவர் முன்னணி என்ற அமைப்பு கூறியுள்ளது.
முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கத்தியை ஐங்கரனும், லைகா புரொடக்ஷன்ஸும் இணைந்து தயாரிக்கின்றன. இருவரில் லைகா புரொடக்ஷன்ஸ்தான் படத்தில் அதிக முதலீடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. லைகா நிறுவனம் பல்வேறு துறைகளில் முதலீடு செய்திருப்பதுடன் பல தொழில்களையும் பல்வேறு நாடுகளில் செய்து வருகிறது. இது இலங்கை அதிபர் ராஜபக்சேக்கு நெருக்கமான நிறுவனம். ராஜபக்சேயின் நெருங்கிய உறவினர்கள் பலரும் லைகாவுடன் இணைந்து வர்த்தகம் செய்துள்ளனர்.
 
இந்த விவரங்கள் இணையதளங்களில் ஆதாரத்துடன் வெளியிடப்பட்டது. ஐங்கரன் கருணாகரனும், லைகா நிறுவனரும் இலங்கை சென்ற போது இலங்கை ராணுவத்துக்கு சொந்தமான ஹெலிகாப்டரைதான் பயன்படுத்தினர். அவர்களை வரவேற்றவர்கள் இலங்கை அரசில் அங்கம் வகிப்பவர்களும் ராணுவ அதிகாரிகளும்.
 
ராஜபக்சேயின் நண்பரின் படத்தில் நடிப்பதா என்று அப்போதே விஜய்க்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து ராஜபக்சேக்கும் லைகாவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என லைகா சார்பில் விளக்கம் தரப்பட்டது. இந்நிலையில் கத்தி படத்தை எப்படியும் முடக்குவது என்று முற்போக்கு மாணவர் முன்னணி முடிவு செய்துள்ளது.
 
கத்தியை தீபாவளிக்கு வெளியிட முடிவு செய்துள்ளனர். படம் வெளியாகும் போது சிற்சில சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளதையே இது காட்டுகிறது.