1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 28 மார்ச் 2014 (11:13 IST)

விக்ரம் பிரபுவின் தந்தையாக நடிக்கும் சத்யராஜ்

நடிகர் விக்ரம் பிரபுவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். தனி ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று சத்யராஜ் பெரிதாக முறுக்கிக் கொண்டதில்லை. அதனால் வாய்ப்புக்கும் பஞ்சமில்லை.

சாந்தனு, விஜய்யுடன் நடித்தவர் தற்போது பரத்துடன் ஒரு படம் கமிட்டாகியிருக்கிறார். அவர் நடிக்கும் இன்னொரு படம் சிகரம் தொடு.
 
தூங்கா நகரம் கௌரவ் இயக்கும் இந்தப் படத்தில் விக்ரம் பிரபு ஹீரோ. வடக்கே உள்ள மலைகளில் இதன் படப்பிடிப்பை நடத்தினர். இந்தப் படத்தில் விக்ரம் பிரபுவின் தந்தையாக சத்யராஜ் நடிக்கிறார். 
 
சமீபத்தில்தான் விஜய்யின் தந்தையாக தலைவா படத்தில் சத்யராஜ் நடித்தார். அதற்கு முன் நயன்தாராவின் தந்தை. இப்போது விக்ரம் பிரபுவின் அப்பா.vikram 
 
இப்படியேப் போனால் ஜெயப்பிரகாஷுக்கு பெரிய அளவில் டஃப் கொடுப்பார் புரட்சி தமிழன்.