வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 16 ஜூலை 2014 (19:17 IST)

வாட் ஏ ஸ்டோரி... சூப்பர் ஹேப்பி... விஜய்யுடன் ஜோ‌டி சேரும் ஸ்ருதி

கத்தி படத்தில் நடித்து வரும் விஜய் அடுத்து சிம்புதேவன் இயக்கும் ஃபேண்டஸி படத்தில் நடிக்க உள்ளார். விஜய்யின் பிஆர்ஓ பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் இந்தப் படத்தில் விஜய் ஜோ‌டியாக ஸ்ருதி, ஹன்சிகா நடிப்பதாக செய்தி. ஸ்ருதி தற்போது அந்த செய்தியை உறுதி செய்துள்ளார்.
 
ஸ்ருதிக்கு இந்தி, தெலுங்கு, தமிழ் அறிமுகங்கள் தோல்வியாக அமைந்தது. இந்தி, தெலுங்கில் தோல்வியிலிருந்து சட்டென்று மீண்டெழுந்தார். தெலுங்கில் தற்போது இவர்தான் அதிர்ஷ்ட நடிகை. இந்தியிலும் மோசமில்லை. நடிப்புக்கு ஸ்கோப் உள்ள வேடம் என்றால் ஸ்ருதியின் வீடு தேடி வருகின்றனர். ஆனால் தமிழ்...?
 
நடித்த இரு படங்களும் சுமார். தற்போது ஹரி இயக்கத்தில் விஷால் ஜோ‌டியாக பூஜை படத்தில் நடிக்கிறார். தீபாவளிக்கு அப்படம் வெளியாக உள்ள நிலையில் விஜய் படம் கிடைத்திருப்பது ஸ்ருதிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அதனை தனது ட்விட்டர் செய்தியில் கொஞ்சம் அதிகபடியாகவே வெளிப்படுத்தியுள்ளார். 
 
சிம்புதேவனின் அடுத்தப் படத்தில் விஜய் சாரின் லீடிங் லேடியாக நடிப்பதில் சூப்பர் ஹேப்பி. வாட் ஏ ஸ்டோரி என்று தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
 
ஹன்சிகாவிடமிருந்து எப்போது ட்விட்டர் செய்தி வரும்? ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.