வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (18:22 IST)

ரஹ்மானுக்கு அமெரிக்க பல்கலைக்கழகத்தின் கவுரவ டாக்டர் பட்டம்

அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்க உள்ளது. மேலும் ரஹ்மான் பெயரில் மாணவர்களுக்கு உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளது.
ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக இரு ஆஸ்கர் விருதுகளை ரஹ்மான் வென்ற பிறகு ரஹ்மானின் புகழும், இசையும் சர்வதேச அளவில் பரவ ஆரம்பித்தது. ஹாலிவுட் உள்பட பலநாட்டு திரைப்படங்களில் இசையமைக்கவும் அவருக்கு வாய்ப்புகள் வருகின்றன. அவரது இசை ஆல்பங்கள் இன்று சர்வதேச சந்தையில் அதிகம் விற்கப்படும் அளவுக்கு பிரபலமடைந்துள்ளன.
 
ரஹ்மானின் இருபது வருட இசை சேவையை பாராட்டி அதற்கு அங்கீகாரம் செய்யும்வகையில் அமெரிக்காவின் பெர்க்லீ இசைப் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது. அக்டோபர் மாதம் 24 -ம் தேதி நடைபெறும் பிரமாண்ட விழாவில் டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளது. அத்துடன் இந்தியாவின் இளைய தலைமுறை மாணவர்கள் பெர்க்லீ பல்கலைக்கழகத்தில் இசை குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ள உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்துள்ளனர். இந்த உதவித் தொகை ரஹ்மானின் பெயரில் அளிக்கப்படும் என்றும் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.