வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Updated : வியாழன், 24 ஜூலை 2014 (13:24 IST)

ரம்பா மீது வரதட்சணை கொடுமை புகார் - பொய் என அண்ணன் பேட்டி

தன் மீதும், ரம்பா உள்ளிட்ட தனது குடும்பத்தினர் மீதும் தொடரப்பட்டிருக்கும் வரதட்சணை கொடுமை புகார் பொய்யானது, அடிப்படை அற்றது என ரம்பாவின் அண்ணன் சீனிவாச ராவ் நேற்று சென்னையில் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
சீனிவாச ராவின் மனைவி பல்லவி, வரதட்சணை கேட்டு தனது கணவனும், அவரது தங்கை ரம்பா உள்ளிட்ட குடும்பத்தினரும் கொடுமை செய்வதாக ஆந்திரா மாநிலம் பஞ்சாரா ஹில்ஸ் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார். இந்நிலையில் சென்னையில் அதனை மறுத்து பேட்டியளித்தார் சீனிவாச ராவ்.
 
பல்லவியின் அக்கா மும்பையில் நகைக்கடை வைத்திருக்கிறார். அவரது கடையின் நகைக் கண்காட்சிக்காக ரம்பாவின் வைர, தங்க நகைகளை கேட்டு வாங்கியிருக்கின்றனர். பிறகு அதனை திருப்பி தரவில்லையாம். தொடர்ந்து கேட்ட பிறகு சில நகைகளை திருப்பித் தந்திருக்கிறார்கள். வைர நகைகளில் இருந்த விலையுயர்ந்த கல்லை மாற்றிவிட்டு தந்திருக்கிறார்கள். மீதி நகைகளை கேட்க வேண்டாம் என்று ரம்பா கூறியிருக்கிறார். 
 

கடந்த டிசம்பர் மாதம் சீனிவாச ராவ் கனடா சென்றிருந்த போது சென்னை வந்த பல்லவி ரம்பாவின் நகைகளையும், பள்ளியில் படித்துக் கொண்டிருந்த தனது குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு ஹைதராபாத் சென்றுள்ளார். அவர் நகைகளை எடுத்தது குறித்து விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் உடனே புகார் தந்தார் சீனிவாச ராவின் தந்தை. அதனைத் தொடர்ந்து பல்லவியும் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலையத்தில் சீனிவாச ராவ் மீது வரதட்சணை கொடுமை புகார் தந்தார்.
இந்த விவரங்களை சொன்ன சீனிவாச ராவ், பல்லவி முதலில் தந்த வரதட்சணை கொடுமை புகாரில் என்னுடைய பெயர் மட்டும்தான் இருந்தது. ஆனால் இப்போது ரம்பாவின் பெயரை வெண்டுமென்றே சேர்த்திருக்கிறார்கள். திருமணமாகி கன்டா சென்ற ரம்பா கடந்த நான்கு வருடங்களாக இந்தியாவுக்கே வரவில்லை. அவர் எப்படி பல்லவியை அடித்து கொடுமைப்படுத்தியிருக்க முடியும்? இது திட்டமிட்டு தொடரப்பட்ட வழக்கு என்றார்.
 
சீனிவாச ராவ் பல்லவியை திருமணம் செய்த போது அவர்களின் குடும்பம் ஐயாயிரம் ரூபாய் வாடகை வீட்டில் குடியிருந்திருக்கிறது. வசதி இல்லையென்றாலும் நல்ல குடும்பப் பெண்ணாக வேண்டும் என்று பல்லவியை திருமணம் செய்து கொண்டாராம். இன்று அவர்களுக்கு சொந்தமாக ஒரு பங்களா இருக்கிறது, மூன்று பிளாட்கள் இருக்கின்றன. அவையெல்லாம் எப்படி வந்தது என்று சீனிவாச ராவ் கேள்வி எழுப்பினார்.
 
பல்லவியின் அண்ணன், அண்ணி, அவரது இரு சகோதரிகள் மற்றும் பல்லவியின் அம்மா ஆகியோர் இந்த பொய் புகாருக்கு பின்னாலிருப்பதாகவும் சீனிவாச ராவ் குற்றம்சாட்டினார். வழக்கை சட்டப்படி சந்திக்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.