வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 25 ஏப்ரல் 2014 (14:51 IST)

மே 9 வருமா வராதா. . ?

பல தேதிகள் சொல்லப்பட்டு தள்ளிப்போன ரஜினியின் கோச்சடையான் வரும் மே 9ஆம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்று அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்ட நிலையில், மீண்டும் சிக்கலில் மாட்டியிருக்கிறது. 
கிராஃபிக்ஸ் வேலைகள், இசை கோர்ப்பு என காலதாமதத்தால் தள்ளிப்போக, தற்போது தயாரிப்பு நிறுவனத்திற்கும், வினியோகஸ்த்தர்களுக்கும் ஏற்பட்ட பணப் பிரச்சனை தீர்க்கப்படாததால் குறிப்பிட்ட நாளில் படம் ரிலீஸாக வாய்ப்பில்லை என்கின்றனர். 
 
ரஜினியை நம்பி பல கோடிகளை முதலீடு செய்திருக்கும் நிறுவனம், ரஜினி மகளும், படத்தின் இயக்குனருமான செளந்தர்யா முதலில் சொல்லப்பட்ட பட்ஜெட்டுக்கு மேல் செலவானதால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளாத நிலையில், மீண்டும் ஏற்படும் இது போன்ற காலதாமதத்தால் கலங்கிப்போய் இருக்கின்றனர்.