1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 18 ஜூன் 2014 (11:10 IST)

மூன்று நாளில் மூன்று கோடி, மகிழ்ச்சியில் தயாரிப்பாளர்கள்

மினிமம் பட்ஜெட், வித்தியாசமான கதை, கச்சிதமான திரைக்கதை, கதைக்கேற்ற நடிகர்கள் என்ற சி.வி.குமாரின் ஃபார்முலா மீண்டும் வெற்றியை தந்துள்ளது. சென்ற வாரம் வெளியான முண்டாசுப்பட்டி முதல் மூன்று தினங்களில் 3.1 கோடிகளை வசூலித்து தயாரிப்பாளர்களை மகிழ்ச்சிப்படுத்தியுள்ளது.
அறிமுக இயக்குனர் ராம்குமார் இயக்கியிருக்கும் முண்டாசுப்பட்டியை சி.வி.குமாரின் திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரித்தன. புகைப்படம் எடுத்தால் இறந்துவிடுவோம் என்ற எண்பதுகளின் கிராமம் ஒன்றின் மூடநம்பிக்கைதான் கதைக்கரு. விஷ்ணு, ராம்தாஸ், நந்திதா, காளி நடித்த இப்படம் தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
 
முதல் மூன்று தினங்களில் தமிழகம் முழுவதுமாக 3.1 கோடிகளை படம் வசூலித்துள்ளது. ஆடியோ ரைட்ஸ், தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமை, வெளிநாட்டு உரிமை, திரையரங்கு வசூல் ஆகியவற்றின் மூலம் பத்து கோடி அளவுக்கு தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைக்க வாய்ப்புள்ளதாக விமர்சகர்கள் கணித்துள்ளனர்.