வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (18:07 IST)

மூச் - தாய்க்கும் பேய்க்கும் நடக்கும் பாசப் போராட்டம்

கவிஞர் சுகுமாரன், இது சிலைகளின் காலம் என்ற பெயரில் அரசியல் கவிதை எழுதியிருக்கிறார். தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை இது பேய்களின் காலம். பூஜை போடுகிற எட்டு படங்களில் நான்கு பேய் படங்களாக இருக்கிறது. இந்த வரிசையில் அடுத்த அதிரடி, மூச்.
 
இரு குழந்தைகளுக்காக ஒரு தாயும், ஒரு பேயும் அடித்துக் கொள்ளும் பாசப் போராட்டமே மூச். 
 
பாரதிராஜாவிடம் இணை இயக்குனராக பணிபுரிந்த வினுபாரதி இந்தப் படத்தின் மூலம் இயக்குனராகிறார். இதில் நாயகனாக நடிப்பது நிதின். நாயகி நிஷா கோஷல். அபி, பியா என்ற இரு குழந்தைகளுக்கு படத்தில் பிரதான கதாபாத்திரம். இந்த குழந்தைகளுக்குதான் ஒரு மானுடத் தாயும், ஒரு மறுபிறவி பேயும் சொந்தம் கொண்டாடுகிறார்கள்.
 
பேய் படத்தை பயப்படும்படி எடுப்பதைவிட சிரிக்கிறபடி எடுப்பதுதான் ரசிகர்களை கவர்கிறது. அந்தவகையில் இதிலும் நகைச்சுவை பிரதான பங்கு வகிக்கிறது. பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் படத்தில் மனோதத்துவ மருத்துவராக வருகிறார்.
 
குன்னூர், கிருஷ்ணகிரி மாவட்டம் காந்திகுப்பத்தில் அதிகமான காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
 
செப்டம்பரில் படம் வெளியாகிறது.