1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 12 செப்டம்பர் 2014 (11:48 IST)

முதல்வரை சந்திக்க விரும்பும் அர்னால்ட்

தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அர்னால்ட் ஸ்வாஸ்நேகர் விரும்புவதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறினார்.
செப்டம்பர் 15 நடக்கும் ஐ பாடல்கள் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அர்னால்ட் சென்னை வருகிறார். அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அர்னால்டின் அதிகாரிகள் முறைப்படி அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக ஐ படத்தை தயாரித்திருக்கும் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தெரிவித்தார்.
 
அர்னால்ட் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண கவர்னராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.