1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 11 செப்டம்பர் 2014 (14:44 IST)

முடிவுக்கு வந்த சிம்பு, நயன்தாராவின் இது நம்ம ஆளு

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா நடித்து வந்த, இது நம்ம ஆளு படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது.
சிம்பு படங்கள் எப்போது முடிவடையும் என்பது யாருக்கும் தெரியாது. ஒரு படத்தை தொடங்கிவிட்டு நடுவில் ஒன்பது வேலை பார்ப்பவர் சிம்பு. முதலில் தொடங்கிய படமும் முடியாது, நடுவில் ஆரம்பித்த ஒன்பதும் முடியாது.
 
எப்போதோ தொடங்கிய வாலு இன்னும் வெளிவராமல் ஆடிக் கொண்டிருக்க, இப்போது தொடங்கிய, இது நம்ம ஆளு படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. காரணம் சிம்பிள். படத்தை தயாரித்திருப்பது சிம்பு சினி ஆர்ட்ஸ் சார்பில் டி.ராஜேந்தர்.
 
பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சிம்புவின் தம்பி குறளரசன் இசையமைத்துள்ளார். தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன.