வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (11:53 IST)

மீண்டும் விஷாலுடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்

லட்சுமி மேனன் நடித்த பல படங்கள் வெற்றி பெற்றிருந்தாலும் அவரை பிஸியான நடிகையாக்கியது விஷாலுடன் அவர் நடித்த பாண்டிய நாடு படம்தான். சுசீந்திரன் இயக்கிய இப்படத்தைத் தொடர்ந்து நான் சிவப்பு மனிதனிலும் லட்சுமி மேனன் விஷால் ஜோடியாக நடித்தார்.
தற்போது ஹரியின் பூஜை மற்றும் சுந்தர். சி யின் ஆம்பள படத்தில் விஷால் நடித்து வருகிறார். பூஜையில் ஸ்ருதியும், ஆம்பளயில் ஹன்சிகாவும் ஹீரோயின். இதையடுத்து மீண்டும் சுசீந்திரன் இயக்கும் படத்தில் விஷால் நடிக்க உள்ளார்.
 
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஹீரோயினாக லட்சுமி மேனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.