வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 1 செப்டம்பர் 2014 (17:22 IST)

மணிரத்னத்தின் புதிய படம் மௌனராகத்தின் ரீமேக்கா?

மணிரத்னம் அடுத்து இயக்கப் போகும் படம் அவரது மௌனராகத்தின் ரீமேக் என புதிதாக வதந்தி கிளம்பியுள்ளது.
 
நாகார்ஜுன், மகேஷ்பாபு, ஐஸ்வர்யா ராய் நடிக்கும் படத்தை மணிரத்னம் இயக்குவதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அப்படம் டேக் ஆஃப் ஆகவில்லை. இந்நிலையில் துல்கர் சல்மான், அலியா பட் ஆகியோர் மணிரத்னத்தின் புதிய படத்தில் நடிப்பதாகவும், அலைபாயுதே போன்ற காதல் கதை இது எனவும் செய்தி வெளியானது.
 
இந்தப் படம் மௌனராகத்தின் ரீமேக் என்று தற்போது ஒரு வதந்தி நிலவுகிறது. ஆனால் மணிரத்னத்தின் அலுவலக வட்டாரம் இதனை இன்னும் உறுதி செய்யவில்லை. படம் குறித்த விவரங்களை மணிரத்னமே தெரிவிப்பார் எனவும் கூறுகின்றனர் (இதுவரை அப்படியொரு விஷயத்தை மணிரத்னம் செய்ததில்லை)
 
மணிரத்னம் படத்தை குறித்த தகவல்களை மீடியாவுக்கு முதலில் தரும் வைரமுத்துவும் இந்தமுறை மௌனமாக இருப்பதுதான் ஆச்சரியம்.