வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 17 ஏப்ரல் 2014 (18:32 IST)

பூஜை - கோயம்புத்தூர்ல தொடங்கறோம் பீகார்ல முடிக்கிறோம்

இதுவரை வீட்டுப் பிரச்சனைகளை அரிவாளுடன் பேசி வந்த ஹரி முதல்முறையாக பூஜை படத்தில் நாட்டுப் பிரச்சனையை பேசவிருக்கிறார். இன்று மக்கள் எதிர்கொள்ளும் ஒரு முக்கிய பிரச்சனையை எதிர்த்து ஹீரோ - விஷால் - பூஜையில் போராடுகிறார்.
ஹரி படங்களின் அடிப்படை மெகா குடும்பம். அப்பத்தா சித்தி சித்தப்பா மாமா அத்தை பேரக்குழந்தைகள் பங்காளி என்று அது நீளும். அப்புறம் ஒரு காதல். கண்டிப்பாக ஒரு வில்லன். 
 
நாட்டுப் பிரச்சனையை எடுத்துக் கொண்டாலும் ஹரியின் குடும்ப அஸ்திவாரத்தில் எந்த சேதாரமும் இல்லை. அதே குடும்பம், அதே காதல், அதே வில்லன் எல்லாமும் பூஜையிலும் இருக்கிறது.
 

படத்தைப் பற்றி கூறியவர், முக்கோண காதல் கதை மாதிரி இது முக்கோண ஆக்சன் கதை. கோயம்புத்தூரில் ஆரம்பிக்கிற கதை பீகாரில் முடியும் என்றார். ஹரி படங்களில் வரும் காதல் பவித்திரமானதாக இருக்கும். காதலி சர்வநிச்சயமாக ஆச்சாரமானவளாகவே இருப்பாள். மாறாக இந்தப் படத்தில் கொஞ்சம் மாடர்னான காதலி. அதற்கு ஸ்ருதி பொருத்தமாக இருப்பார் என்பதால் அவரை ஒப்பந்தம் செய்துள்ளனர்.
விஷாலுக்கும் எனக்கும் பூஜை அடுத்தக்கட்ட பாய்ச்சலாக இருக்கும் என நம்பிக்கையுடன் கூறுகிறார் ஹரி.