வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 10 ஜூலை 2014 (17:25 IST)

பிரமாண்டமாக நடக்கும் அஞ்சான் ஆடியோ விழா - கமல் கலந்து கொள்கிறார்

அஞ்சான் படத்தின் ஒவ்வொரு பிரேமையும் பிரமாண்டப்படுத்திப் பார்க்க வேண்டும் என்ற விருப்பம் லிங்குசாமிக்கும், தனஞ்செயனுக்கும் உள்ளது. படத்தின் டீஸர் வெளியாகும் முன்பு டீஸர் குறித்து அரை டஜன் முறையாவது டீஸரின் பிரமாண்டம், அழகு, நளினம் குறித்து இருவரும் பேசியிருப்பார்கள். அதற்கேற்ப 10 லட்சம் பேர் டீஸரை பார்த்துள்ளனர்.
படத்தின் பாடல்களை பிரமாண்டமாக வெளியிடுவது என்பதில் இருவருக்கும் மாற்று கருத்தில்லை. சூர்யாவின் ரசிகர்கள் நான்காயிரம் பேரை திரட்டி பாடல்கள் வெளியீட்டு விழாவை அசத்திவிட வேண்டும் என ஏற்கனவே திட்டமிடப்பட்டது. அதற்கேற்ப சென்னை ட்ரேட் சென்டரை விழாவுக்காக தேர்வு செய்துள்ளனர். பாடல்கள் அடங்கிய முதல் சிடியை வெளியிடுகிறவர் கமல். கமல் தற்போது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரித்து வரும் உத்தம வில்லனில் நடித்து வருகிறார்.
 
மும்பையை களமாகக் கொண்ட இந்தப் படத்தில் சூர்யா இரு வேடங்களில் நடித்துள்ளார். ஹீரோயின் சமந்தா. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்ய யுவன் இசையமைத்துள்ளார். டீஸரில் இடம்பெற்ற பாடலும் இசையும் ரசிகர்களின் நாடி நரம்புகளை ஏற்கனவே முறுக்கேற்றியிருக்கிறது. அதை அதிகப்படுத்துவது போல்தான் இருக்கும் மற்ற பாடல்களும். 
 
ஜூலை 22ஆம் தேதி பாடல்கள் வெளியீட்டு விழா நடக்கிறது.