வெள்ளி, 29 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (14:10 IST)

பியூஸ் பிடுங்கப்பட்ட சந்தானம் - குற்றம் நடந்தது என்ன?

சென்னை விருகம்பாக்கத்தில் இயங்கிவரும் நடிகர் சந்தானத்தின் அலுவலகத்தில் மின்திருட்டு நடந்ததாகக் கூறி மின் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர். இதனை முன்னிட்டு பல்வேறு தகவல்கள், சர்ச்சைகள்.
 
உண்மையில் நடந்தது என்ன?
 
விருகம்பாக்கம் எஸ்பிஐ காலனியில் சந்தானத்தின் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்துக்கு வீட்டு மின் இணைப்பு வாங்கியுள்ளனர். நியாயமாக இந்த அலுவலகத்துக்கு வர்த்தக மின் இணைப்பு வாங்கியிருக்க வேண்டும். மேலும், இந்த அலுவலகத்தை குறும்படங்கள், விளம்பரப் படங்கள் எடுப்பதற்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.
 
வீட்டு மின் இணைப்பை வாங்கி இப்படி தொழில்முறை பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவது மின் திருட்டு. இதனை கண்டுபிடிக்க மின்சாரத்துறை பறக்கும்படையை அமைத்துள்ளது. சாலிகிராமம், விருகம்பாக்கம் போன்ற திரையுலகினர் அதிகம் வசிக்கும் பகுதிகள்தான் இவர்களின் டார்கெட். திரையுலகைச் சேர்ந்தவர்கள்தான் சினிமா தயாரிக்க வீட்டை வாடகைக்கு எடுத்து அதனை அலுவலகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
 
அப்படியொரு சோதனையில் சந்தானத்தின் அலுவலகமும் சிக்கியது. வர்த்தக மின் கட்டண இணைப்புக்கான பணத்தை செலுத்த பறக்கும்படையில் உள்ள அதிகாரிகள் சந்தானத்தின் அலுவலகத்தை கவனித்து வரும் அவரது உறவினரிடம் கூறியுள்ளனர். ஆனால் மாலைவரை அவர்கள் பணத்தை கட்டவில்லை. அதனைத் தொடர்ந்து சந்தானம் அலுவலகத்தின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
 
பணத்தை செலுத்தினால் மட்டுமே மின் இணைப்பு என்று அதிகாரிகள் கறார் காட்டிய பிறகு உரிய பணத்தை செலுத்தியுள்ளனர். மின் இணைப்பும் உடனே வழங்கப்பட்டது.
 
பெருசா சம்பளம் வாங்குகிறவர்களே இப்படி சிறுசா நடந்துக்கலாமா?