வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By John
Last Updated : வெள்ளி, 18 ஏப்ரல் 2014 (19:00 IST)

நோ காமெடி, ஒன்லி அடிதடி

எவ்வளவு நாளைக்குதான் ஹீரோவின் நண்பனாக அவரோட காதலுக்கு ஹெல்ப் பண்றது...? அதுதான் நானே ஹீரோவாயிடலாம்னு முடிவெடுத்திட்டேன் - இப்படி ஆர்வக் கோளாறும் ஆவேசவுமாக ஒரு முடிவை எடுத்துள்ளார் சந்தானம்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் சந்தானம்தான் ஹீரோ. இந்தப் படத்தை முடித்த பின் மீண்டும் தனது காமெடி டிராக்குக்கு திரும்புவார் என எதிர்பார்த்தவர்களுக்கு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் அதிர்ச்சியை தந்தது சந்தனத்தின் பேச்சு. பெரிய நட்சத்திரங்கள், இயக்குனர்கள் யாருமே எனக்கு வேண்டாம். என்னை மட்டும் நம்பி இறங்கியிருக்கேன் என்று எல்லையில் யுத்தத்துக்கு போகிற கணக்கில் அவர் தொடை தட்டியது கொஞ்சம் ஓவர்.
 

இனி தனி ஹீரோவாக மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்துள்ளாராம் சந்தானம். இவர் திரையுலகுக்கு நுழையவும், நிலைத்து நிற்கவும் காரணமாக இருந்தவர் சிம்பு. அதேபோல் இயக்குனர் ராஜேஷும் சந்தானத்தின் வளர்ச்சியில் கணிசமான பங்கு வகித்தவர். அவர்களையெல்லாம் மரியாதைக்காவது குறிப்பிடவில்லை என்பதுடன் எனக்கு யாருமே தேவையில்லை என உதாசீனப்படுத்தவும் செய்தார்.
சந்தானத்தின் இந்த திடீர் மாற்றம் காரணமாக அவரை ஒப்பந்தம் செய்ய நினைத்த இயக்குனர்களும், நடிகர்களும் சந்தானத்துக்கு பதில் சூரியை நடிக்க வைக்க ஆர்வம் காட்டுகின்றனர். 
 
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் ஒரிஜினலான தெலுங்கு மரியாத ராமண்ணாவில் ஹீரோவாக நடித்தவர், அதற்கு முன்புவரை காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த சுனில். மரியாத ராமண்ணாவின் வெற்றி காரணமாக சிக்ஸ்பேக் எல்லாம் வைத்து தனி ஹீரோவானார். ஆனால் அது எடுபடாமல் இப்போது மீண்டும் காமெடி ட்ராக்குக்கு திரும்பியுள்ளார்.
 
காமெடியனாக தனக்குக் கிடைத்த வரவேற்பை வைத்து இப்படியொரு முடிவை சந்தானம் எடுத்திருந்தால் அது தவறு. அடுத்தவனை கிண்டல் செய்வதை வைத்தே முழுப்படத்தையும் எடுக்க முடியமா என்ன.
 
நல்லாயிருக்கு என்று நக்கி சாப்பிட்டாலும் ஊறுகாய் ஒருபோதும் முழு உணவாகாது.