வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 31 ஜூலை 2014 (11:46 IST)

நான் மேனன் இல்லை வெறும் பார்வதிதான்

நான் அய்யர் கிடையாது வெறும் ஜனனி மட்டும்தான் என்று ஜனனி அய்யர் சொன்னது போல் இப்போது பார்வதி மேனனும் கூறியுள்ளார்.
2006 -ல் அவுட் ஆஃப் சிலபஸ் மலையாளப் படத்தில் சின்ன வேடத்தில் அறிமுகமானார் பார்வதி. அப்போது அவரது பெயர் பார்வதி மட்டுமே. அதே வருடத்தில் ரோமா உள்ளிட்ட சிலருடன் நோட்புக் படத்தில் நடித்தார். அதிலும் ஹீரோயின் என்று சொல்ல முடியாது. அதையடுத்து சத்தியன் அந்திக்காடின் வினோதயாத்ரா படத்திலும் ஹீரோயின் மீரா ஜாஸ்மின். பார்வதிக்கு முகேஷின் தங்கையாக ஒரு சின்ன வேடம்.
 
மலையாளத்தில் அறிமுகமானாலும் பார்வதி தனி ஹீரோயினாக நடித்தது கன்னடத்தில் வெளியான மிலானா படத்தில். படம் ஹிட். பார்வதி நடித்த முதல் ஹீரோயின் ஓரியண்ட் படம் என்றால் அது தமிழில் சசி இயக்கிய பூ.
 
2006 -ல் அறிமுகமான பார்வதி இந்த வருடம்வரை வெறும் 13 படங்களில் மட்டுமே நடித்துள்ளார். கதை, கேரக்டர் பிடித்திருந்தால் மட்டுமே கால்ஷீட் தரும் அபூர்வ நடிகை இவர்.
 
இந்த வருடம் இவர் நடித்த பெங்களூர் டேய்ஸ் மலையாளப் படம் வெற்றி பெற்றுள்ளது. தற்போது கமலின் உத்தம வில்லன் படத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் ஒரேயொரு படம், எந்நு நின்றே மொய்தீன்.
 
பார்வதியின் பாஸ்போர்ட்டிலும் பார்வதி என்றுதான் உள்ளது. அப்புறம் மேனன் எப்படி வந்தது?
 
முதல்முதலில் கன்னடப் படத்தில்தான் மேனன் என்று போட்டிருக்கிறார்கள். மீடியாவும் அதனை பயன்படுத்த வெறும் பார்வதி பார்வதி மேனன் ஆகிவிட்டார். 
 
உத்தம வில்லனில் பார்வதியுடன் பார்வதி நாயரும் நடிக்கிறார். பெயர் குழப்பம் ஏற்படாமல் இருக்க இவரை மேனன் என்றும் அவரை நாயர் என்றும் படயூனிட் கூப்பிடுகிறது.
 
பார்வதியே தான் மேனன் இல்லை என்றாலும் மேனன் அவரைவிட்டுப் போகாது போலிருக்கிறது.