1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (12:47 IST)

நாங்க எல்லாம் அப்பவே வித்வான்கள்

ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறார் லட்சுமி மேனன். இனியாவை வைத்து இந்தப் பாடல் காட்சி படமாக்கப்பட்டும் விட்டது. இப்போது போய் எதுக்கு அந்த பழைய செய்தி...?
காரணம் இருக்கிறது. 
 
ஆண்ட்ரியா, ரம்யா நம்பீஸன், ஸ்ருதிஹாசன் எல்லாம் பாடிய போது அதனை உற்சாகமாக வரவேற்ற ரசிகர்களும், திரையுலகினரும் லட்சுமி மேனன் பாடிய போது மட்டும் அவ்வளவாக கண்டு கொள்ளவில்லை. ஆ ஊ ன்னா ஏதாவது நடிகையை பாட வச்சிடுறாங்க என்ற சலிப்புதான் அதிகம் கேட்டது. இசையமைப்பாளர் எஸ்.எஸ்.குமரன் பிரஸ்மீட் வைத்தே பிளந்து கட்டினார். ஆண்ட்ரியா முதற்கொண்டு அனைத்து நடிகைகளையும் அவர் பிரித்து மேய்ந்தாலும் லட்சுமி மேனன் பாடிய பிறகு அவர் விமர்சித்ததால் அவரது விமர்சனம் முழுக்க லட்சுமி மேனனிடமே நிலைகொண்டது.
 
இந்நிலையில் யார் பாடச் சொன்னாலும் - படப்பிடிப்பில் சும்மாச்சுக்கும் பாடினாலும் - கர்னாடக சங்கீத கீர்த்தனைகளைதான் எடுத்துவிடுகிறார். கேட்டால் நாலம்புலேர்ந்தே கர்னாடக சங்கீதம் படிக்கிறேனாக்கும். எனக்கு முறைப்படி சங்கீதம் அத்துபடி. வேணும்னா ஒரு பாட்டை சொல்லுங்க, அது எந்த ராகம்னு கரெக்டா சொல்றேன் என்று அவராகவே சங்கீத பரீட்சைக்கு தயாராகிறார்.
 
ஏன் இப்படி?
 
எஸ்.எஸ்.குமரனும் மற்றவர்களும் சொல்வது போல சும்மாச்சுக்கும் பாடவில்லை. முறையாக சங்கீதம் தெரிஞ்சுதான் பாடறோம் என்பதை தெரியப்படுத்தவே இப்படியொரு வாலண்ட்ரி எக்ஸாமுக்கு ஹால்டிக்கெட் இல்லாமலே என்ட்ரியாகிறார் லட்சுமி மேனன்.
 
நீங்க ஒரு வித்வான்ங்கிறதை நாங்க நம்பறோம்.