வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (11:26 IST)

த்ரிஷாவின் நன்றி அறிவிப்பு

நடிகைகளுக்கிடையில் நட்பு உருவாவது என்பது கம்யூனிஸ்ட்களுக்கும், பிஜேபிக்கும் நடுவில் கூட்டணி உருவாவதைவிட கடினமானது. அதுவும் முன்னணி நடிகைகள் என்றால் பின்னணி பொல்லாப்புகள் எக்கச்சக்கமாக இருக்கும்.
மாறாக ஐ இசை வெளியீட்டு விழாவில் பேசிய எமி ஜாக்சன், விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் த்ரிஷாவின் நடிப்பு தனக்கு மிகவும் பிடித்திருந்ததாகவும், அதன் இந்தி ரீமேக்கில் நடிக்க த்ரிஷாவின் நடிப்புதான் உந்துதலாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.
எமியின் இந்தப் பேச்சு த்ரிஷாவின் நெஞ்சை தொட்டுவிட்டது. தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் எமிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அத்துடன் ஐ வெற்றிபெற வாழ்த்தும் கூறியிருக்கிறார்.
 
ஆரம்பத்தில் ஏட்டிக்கு போட்டியாக இருந்த த்ரிஷாவும், நயன்தாராவும் இப்போது திக் ப்ரெண்ட்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது.