1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (17:43 IST)

தமிழில் பிரமாண்டமாக வெளியாகும் பேங் பேங்

ஹிர்த்திக் ரோஷன், கத்ரினா கைப் நடித்துள்ள பேங் பேங் படத்தை நேரடி தமிழ்ப் படம் போல் அதிக திரையரங்குகளில் வெளியிடுகின்றனர்.
 
ஹிர்த்திக்கின் க்ரிஷ் 3 படம் இந்தியாவில் 200 கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்தது. அதற்கு முக்கிய காரணம், படம் தமிழ், தெலுங்கு போன்ற பிராந்திய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. விரைவில் வெளியாகவிருக்கும் பேங் பேங் திரைப்படத்தையும் தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகின்றனர்.
 
முதல்கட்டமாக படத்தின் பாடல்களை தமிழ்ப்படுத்தியுள்ளனர். பேங் பேங் -கின் தமிழ்ப் பாடல்களை அடுத்த வாரம் வெளியிடுகின்றனர். இந்த விழாவில் ஹிர்த்திக் ரோஷன் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.