வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: வியாழன், 31 ஜூலை 2014 (19:54 IST)

ஜுனியர் ரங்காராவ் பராக்...

இந்திய சினிமாவில் வாரிசுகளின் ஆதிக்கம் தாங்க முடியவில்லை. இந்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம் என்று எந்த மொழியிலும் வாரிசுகள்தான் வரிசைகட்டி நிற்கிறார்கள்.
 
தெலுங்கு சினிமா இப்போது வாரிசுகளின் பிடியில்தான் உள்ளது. ராம் சரண் தேஜா, நாக சைதன்யா, அல்லு அர்ஜுன் என்று முன்னணி இளம் நடிகர்கள் அனைவருமே அப்பா, சித்தப்பாக்களின் சினிமா பிரபலத்தால் சினிமாவுக்கு வந்தவர்கள்.
ஹீரோக்களுக்கான இடத்தைதான் இப்படி ஆக்கிரமித்திருக்கிறார்கள் என்றால் வில்லன், குணச்சித்திரம் என்று மற்ற ஏரியாக்களிலும் வாரிசுகள்தான் துண்டு போட்டிருக்கிறார்கள்.
 
பழம்பெரும் நடிகர் எஸ்.வி.ரங்காராவை நினைவிருக்கிறதா? கல்யாண சமையல் சாதம் காய்கறிகளும் பிரமாதம் பாடலில் பிரமாதப்படுத்தியவரை? அன்று தமிழிலும், தெலுங்கிலும் ரங்காராவ் என்றால் தனி மார்க்கெட், தனி ரசிகர் பட்டாளம். அவரின் பேரன் ஜுனியர் ரங்காராவ் என்ற நாமகரணத்துடன் நடிக்க வந்திருக்கிறார். 
 
தெலுங்கில் அறியப்படும் வில்லனான இவர் அங்கு நடித்த மிஸ்டர் 7 என்ற படத்தை தமிழில் டப் செய்து வெளியிட்டு தனது தமிழ் திரைப் பிரவேசத்தை தொடங்குகிறார். சிலரைப் போல் டப்பிங் படத்தை புதிதாக எடுப்பது போல் சொல்லாமல் இது டப்பிங் படம்தான் என்று உண்மையை சொன்னாரே... அதற்காகவே ஜுனியருக்கு ஒரு ஓ போடலாம்.