1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Webdunia
Last Modified: புதன், 12 மார்ச் 2014 (13:20 IST)

கோச்சடையானை ஜேம்ஸ் கேமரூன் பார்க்கிறார்

மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் உருவாகியிருக்கும் இந்தியாவின் முதல் முழுநீளப் படமான கோச்சடையானை nலிவுட் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பார்க்கிறார்.
FILE

மோஷன் கேப்சர் தொழில்நுட்பம் பல வருடங்களாக nலிவுட் படங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை வெற்றிகரமாக கையாண்டவர் இயக்குனர் பீட்டர் ஜாக்ஸன். அவரின் லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் சீரிஸில் இந்த தொழில்நுட்பம் சிறந்தமுறையில் பயன்படுத்தியதைப் பார்த்த பின்பே டின்டின் படத்தை மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் எடுப்பது என்று ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் முடிவு செய்தார்.

இந்த தொழில்நுட்பத்தை அவதார் படம் அடுத்தக்கட்டத்துக்கு எடுத்துச் சென்றது. பீட்டர் ஜாக்ஸனின் வீட்டா ஸ்டுடியோதான் அவதாரின் முக்கிய பணிகளை கவனித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மோஷன் கேப்சர் அல்லது பெர்பாமன்ஸ் கேப்சர் தொழில்நுட்பத்தின் இன்றைய தேதியின் உச்சம், அவதார்.
FILE

அதே தொழில்நுட்பத்தில் தயாரான இந்தியப் படம் கோச்சடையான். அவதாருக்கு செலவானது 237 மில்லியன் டாலர்கள். விளம்பரத்துக்கு மேலுமொரு 150 மில்லியன் டாலர்கள். ஆனால் கோச்சடையானின் பட்ஜெட் 23 மில்லியன் டாலர்களுக்கள்தான்.

கோச்சடையானைப் பார்க்க ஜேம்ஸ் கேமரூன் ஆர்வமாக இருப்பதாகவும், அவருக்கு விரைவில் படத்தை திரையிட்டு கட்ட இருப்பதாகவும் படத்தின் இயக்குனர் சௌந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின் கூறியுள்ளார்.
FILE

ஜேம்ஸ் கேமரூனின் படத்தைப் பற்றிய கமெண்ட் கோச்சடையானின் சந்தை மதிப்பை உலக அளவில் விஸ்தரிக்கும் என்பதால் இந்த சிறப்பு திரையிடல் முக்கியமானதாக கருதப்படுகிறது.