வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 11 ஜூன் 2014 (13:24 IST)

குடும்ப ட்ராமாவுக்கு மாறிய கிருத்திகா

பத்திரிகை, பள்ளிக்கூடம் என்று கிருத்திகா உதயநிதிக்கு பல ஹாபிகள், தொழில்கள். கடைசியில் அவர் கண்டுபிடித்த ஹாபி சினிமா. கணவர் உதயநிதி தயாரிப்பில் வணக்கம் சென்னை படத்துடன் இயக்குனராக கோடம்பாக்கத்தில் அறிமுகமானார். வணக்கம் சென்னை ரொமான்டிக் காமெடிப் படம். அது சரியாகப் போகாததால் அடுத்தப் படத்தில் ஃபேமிலி ட்ராமாவுக்கு முயற்சி செய்கிறார்.
 
வணக்கம் சென்னைக்குப் பிறகு கிருத்திகா எழுதியிருக்கும் ஸ்கிரிப்ட் ஃபேமிலி ட்ராமா என்று அவரே கூறியுள்ளார். இந்தக் கதையை கேஷுவலாக தனுஷிடம் சொல்ல, இப்படியொரு கதையா என்று அசந்துபோன தனுஷ் தனது தயாரிப்பில்தான் இந்த ஸ்கிரிப்டை படமாக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைத்துள்ளார். கிருத்திகாவும் சரி என்றிருக்கிறார். 
 
ஸ்கிரிப்ட் பணிகள் தற்போது முடிந்துள்ளன. யாரை நடிக்க வைப்பது என்று கிருத்திகா இன்னும் முடிவு செய்யவில்லையாம். இசை அனிருத்.
 
தனுஷ் தயாரிப்பில் கிருத்திகா இயக்கும் இந்த ஃபேமிலி ட்ராமாவில் விஜய் சேதுபதி நடிப்பார் என்று சென்ற வாரம் கிசுகிசு கிளம்பியது. இதைவிட பெரிய கிசுகிசுவுக்கே சைலண்டாக இருந்த சேதுபதி, இந்த கிசுகிசு கிளம்பியதும் அவசரமாக, அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று மறுப்பு தெரிவித்தார். 
 
ஃபேமிலி ட்ராமா எடுக்க கிருத்திகாவைவிட சரியான ஆள் இருக்க முடியாது. பிறகு ஏன் விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்தார் என்று தெரியவில்லை.