வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வெள்ளி, 25 ஜூலை 2014 (11:32 IST)

காஸ்ட்லி நடிகை - நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய ஸ்ருதி...?

தோல்வியுடன் தெலுங்கில் சினிமா கரியரை ஆரம்பித்த ஸ்ருதிஹாசன்தான் இப்போது தெலுங்கின் மோஸ்ட் வான்டட் நடிகை. அவர் கேட்பதைவிட அதிக சம்பளம் தர தெலுங்கு திரையுலகம் தயாராக உள்ளது. 
இந்த அதிர்ஷ்டம் ஆரம்பமானது 2012 -ல். பதினோரு வருடங்களாக ஒரு நல்ல ஹிட் கிடைக்காமல் இருந்த பவன் கல்யாணுக்கு ஸ்ருதியுடன் நடித்த கப்பார்சிங் பம்பர் ஹிட்டாக அமைந்து அவரது தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
 
அடுத்து ஸ்ருதி ரவி தேஜாவுடன் பலுபு படத்தில் நடித்தார். 15 கோடியில் தயாரான படம் 55 கோடிகளை வசூலித்தது. ஜுனியர் என்டிஆருடன் நடித்த ராமையா வஸ்தாவையா படமும் ஹிட். 
 
இந்த வருடம் ஜனவரியில் ராம் சரண் தேஜாவுடன் நடித்த யவடு வெளியானது. ஸ்ருதியின் கவர்ச்சியில் படம் சக்கைப்போடு போட்டது. அதன் பிறகு அல்லு அர்ஜுனுடன் நடித்த ரேஸ் குர்ரம். அதுவும் பம்பர் ஹிட். 
 
இதில் கவனிக்க வேண்டிய விஷயம், ஸ்ருதியுடன் நடித்த ஹீரோக்கள் அனைவரும் ஒரு ஹிட்டுக்காக தள்ளாடிக் கொண்டிருந்த நேரத்தில் ஸ்ருதியுடன் அவர்கள் ஜோ‌டி சேர்ந்த படங்கள் பம்பர் ஹிட்டாகி அவர்களின் மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியது. 
 
அதனால்தான் மகேஷ் பாபு தனது அடுத்தப் படத்தில் ஸ்ருதியை தேர்வு செய்துள்ளார். கொரட்டா சிவா இயக்கத்தில் மைத்ரி மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்காக ஸ்ருதிக்கு இரண்டு கோடி சம்பளம் பேசப்பட்டிருப்பதாக ஆந்திரா அலறுகிறது. இதுவரை நயன்தாராதான் ஒன்றரை கோடி சம்பளத்துடன் முதலிடத்தில் இருந்தார். ஸ்ருதி அவரை முந்தியிருப்பதாக ஹைதராபாத்திலிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
 
தமிழில் ஹரியின் பூஜை படத்தில் நடித்து வரும் ஸ்ருதி சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தில் விஜய் ஜோ‌டியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவ்விரு படங்கள் வெளியான பிறகு தமிழிலும் அவரது மார்க்கெட் கிடுகிடுவென உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.