வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: புதன், 23 ஜூலை 2014 (10:46 IST)

கமல் நடிக்கும் த்ரிஷ்யம் தமிழ் ரீமேக்குக்கு தடை

கமல் படமும் பிரச்சனையும் அண்ணன் தம்பிகள். எந்தப் படம் அவர் நடிப்பதாக இருந்தாலும் பிரச்சனை கிளம்பாமல் இருக்காது. த்ரிஷ்யம் ரீமேக்கில் நடிப்பதற்கும் நீதிமன்றம் மூலம் தடை விதிக்கப்பட்டுள்ளது.
த்ரிஷ்யம் மலையாளத்தில் வெளியான போது எந்தப் பிரச்சனையுமில்லை. கன்னடம், தெலுங்கில் ரீமேக்காகி வெளியான போதும் சர்ச்சையில்லை. தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார் என்றதும் லீகல் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் ஏக்தா கபூர் (அது என்ன பிரச்சனை என்று பிறகு பார்ப்போம்). அதேநேரம் கூத்தமங்கலத்தைச் சேர்ந்த சதீஷ்பால் என்பவர் எர்ணாகுளம் செஷன்ஸ் கோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில்,
த்ரிஷ்யம் படம் நான் எழுதிய ஒரு மழைக்காலத்து என்ற கதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டது. அந்த கதைக்கான உரிமை என்னிடம்தான் உள்ளது. அதன் ரீமேக் உரிமையும் எனக்கே சொந்தம். ஆனால் என்னுடைய அனுமதி இல்லாமல் த்ரிஷ்யத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளனர். அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
 
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி த்ரிஷ்யத்தை தமிழில் ரீமேக் செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
 
த்ரிஷ்யத்தை கன்னடம், தெலுங்கில் ரீமேக் செய்கையில் கூத்தமங்கலம் சதீஷ்பால் என்ன செய்து கொண்டிருந்தார்? ஏன் அப்போது கோர்ட்டுக்கு போகவில்லை? தமிழ் ரீமேக்குக்கு மட்டும் ஏன் தடை கேட்டார்?
 
எல்லாம் கமல்ஹாசனின் ராசி போலிருக்கிறது.