1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: செவ்வாய், 22 ஜூலை 2014 (13:41 IST)

ஒரே வருடத்தில் 13 படங்கள் இயக்கிய சாதனை இயக்குனர் மரணம்

இந்திய சினிமா ஒரு சாதனை இயக்குனரை சென்ற வாரம் இழந்தது. அவர் மலையாளத்தின் பிரபல இயக்குனர் சசிகுமார்.
 
சசிகுமாரின் இயற்பெயர் வார்க்கி ஜான். சினிமாவுக்கு வந்த போது சசிகுமாராக அவரது பெயர் மாற்றப்பட்டது. தமிழில் 100 படங்களுக்கு மேல் இயக்கியவர் ராம.நாராயணன். சமீபத்தில் அவர் மரணமடைந்தார். மலையாளத்தில் 100 படங்களுக்கு மேல் இயக்கியவர் சசிகுமார். சுமார் 141 படங்களை இயக்கியுள்ளார். 
 
இதில் 87 படங்களில் மலையாளத்தின் முதல் சூப்பர் ஸ்டார் பிரேம் நசீர் ஹீரோவாக நடித்திருந்தார். ஒரு நடிகரை ஹீரோவாக வைத்து உலகில் எந்த இயக்குனரும் இத்தனை படங்கள் இயக்கியதில்லை. அதேபோல் ஒரே வருடத்தில் அதிகபட்சமாக 13 திரைப்படங்களை இயக்கிய பெருமையும் இவருக்கு உண்டு.
 
பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரரான சசிகுமார் சென்ற 17ஆம் தேதி காலமானார். அவர் ஜே.சி.டேனியல் விருது உள்பட பல்வேறு விருதுகள் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.