1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: வியாழன், 18 செப்டம்பர் 2014 (12:34 IST)

எனக்கும் அவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை - கை விரித்த நடிகை

சரோஜா படத்தில் நிகிதா போட்ட கெட்ட ஆட்டத்தை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள். சேலைகட்டி ஆடியிருந்தாலும் ரசிகர்களின் மனதை பேயாட்டம் போட வைத்த ஆட்டம் அது.
கன்னடத்தில் பிஸியாக இருந்த நிகிதாவுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் நடிக்க தடை விதித்தது. காரணம்...? என்னுடைய கணவரை நிகிதா அபகரித்துக் கொண்டார் என்ற, நடிகர் தர்ஷனின் மனைவி அளித்த புகார். கன்னட திரையுலகில் புயலாக வீசிய இந்த சர்ச்சை இப்போது ஓரளவு தணிந்துள்ளது. மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார் நிகிதா. 
 
இந்த நேரத்தில், தர்ஷனின் மனைவி தன்னை அடிக்க அடியாட்களை அனுப்பிய விவகாரத்தையெல்லாம் மீடியாவில் முன்வைத்துள்ளார். தர்ஷன் தன்னிடம் மன்னிப்பு கடிதம் தந்ததாகவும், அவருக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் நிகிதா கூறினார். 
 
வீட்டில் சும்மாயிருந்த நேரத்தில் உடற்பயிற்சி செய்து இளைத்து இளமைக்கு திரும்பியுள்ளார். தமிழில் எப்போது நடிக்கப் போகிறார் என்றுதான் தெரியவில்லை.