வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Updated : சனி, 7 ஜூன் 2014 (14:14 IST)

எந்திரன் - 2 விறுவிறுப்பும் வில்லங்கமும்

கடந்த சில தினங்களாக எந்திரன்-2 பற்றிய செய்திகள் கோடம்பாக்கத்தில் அலையடிக்கிறது. 2010-ல் வெளியான எந்திரன் தமிழ் சினிமா சரித்திரத்தில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை பொறித்தது. ஷங்கர் இயக்கத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்திருந்தார். ஐஸ்வர்யா ராய் ஹீரோயினாக நடித்திருந்தது படத்துக்கு கூடுதல் அட்ராக்ஷனாக அமைந்தது.
இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் எடுக்கிறார் என்ற பேச்சு நெடுங்காலமாக இருக்கிறது. கடந்த சில தினங்களாக பேச்சு வலுப்பட்டிருக்கிறது. கோச்சடையானை எடுத்த ஈராஸ் நிறுவனம் எந்திரன்-2 வை தயாரிக்க ஆர்வம் காட்டுவதாகவும் ஷங்கர், ரஜினிக்கு அதில் உடன்பாடென்றும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எந்திரனைவிட அதிக பொருட்செலவில் தயாரிக்கவும் ஈராஸ் தயார்.
 

எந்திரனை தயாரித்தது சன் பிக்சர்ஸ். எந்திரன் படத்தின் பெயர் உரிமை அவர்களிடம்தான் உள்ளது. அவ்வளவு எளிதில் எந்திரன் உரிமையை அவர்கள் விட்டுத் தருவார்களா என்பது கேள்விக்குறி. 
சிங்கம் படத்தையும் சன் பிக்சர்ஸ்தான் தயாரித்தது. சிங்கம் 2 வை வேறொரு தயாரிப்பாளர் தயாரித்த போது சிங்கம் பெயரை பயன்படுத்த கணிசமான தொகையை சன் பிக்சர்ஸ் பெற்றுக் கொண்டது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள். எந்திரனை மட்டும் அவர்கள் இலவசமாக கொடுத்துவிடுவார்களா?
 
ரஜினியின் செல்வாக்கு இந்த வில்லங்கங்களை வீழ்த்திவிடும் என்பதால் எந்திரன் 2 வை சந்தோஷமாக எதிர்நோக்கலாம்.