வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Muthukumar
Last Modified: வியாழன், 24 ஏப்ரல் 2014 (11:57 IST)

உத்தம வில்லன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கமல் நடிக்கும் உத்தம வில்லன் படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
Uthama Villan
கமல் எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த நாடகக் கலைஞராகவும், இந்த நூற்றாண்டைச் சேர்ந்த சினிமா நடிகராகவும் இரண்டு வேடங்களில் இந்தப் படத்தில் தோன்றுகிறார். அவருடன் ஆண்ட்ரியா, பூஜா குமார், பார்வதி, ஊர்வசி, ஜெயராம், நாசர் ஆகியோரும் நடிக்கின்றனர். கே.பாலசந்தர், கே.விஸ்வநாத் ஆகிய ஜாம்பவான்களும் படத்தில் இருக்கிறார்கள்.
 
ஹைதராபாத், சென்னை ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தியவர்கள் பாடல் காட்சிக்காக நாளை (25 -ம் தேதி) ஆஸ்ட்ரேலியா செல்கிறார்கள்.
 
உத்தம வில்லனை கமலுடன் இணைந்து லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. ஆகஸ்ட் 29 விநாயகர் சதுர்த்தி அன்று படம் வெளியாகும் என முன்பு கூறப்பட்டது. தற்போது செப்டம்பர் 10 புதன்கிழமை படம் வெளியாகும் என்று திருப்பதி பிரதர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.