வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 23 ஜூலை 2014 (17:34 IST)

இணையத்தில் அஞ்சான் பாடல் காட்சிகள் - கடும் சினத்தில் தனஞ்செயன்

அஞ்சான் படத்தின் பாடல்கள் நேற்று வெளியிடப்பட்டன. அதேநேரம் சில பாடல்களின் வீடியோக்கள் அனுமதியின்றி இணையத்தில் வெளியானதாகவும் செய்தி வெளியானது.
புதுப்படங்களின் பாடல்கள், காட்சிகள் இணையத்தில் திருட்டுத்தனமாக பதிவேற்றப்படுவது இது முதல்முறையல்ல. சரத்குமார் நடித்த ஜக்குபாய் வெளிவரும் முன்பு முழுப்படமும் இணையத்தில் வெளியானது. அதேபோல் அஞ்சான் படத்தின் சில பாடல் காட்சிகள் இணையத்தில் அத்துமீறி பதிவேற்றப்பட்டதாக தகவல்.
 
இதுகுறித்து தனது ட்விட்டர் செய்தியில் அஞ்சானை தயாரித்திருக்கும் யுடிவியின் தென்னக நிர்வாகி தனஞ்செயன் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். "குறிப்பிட்ட காட்சிகளை இணையத்திலிருந்து நீக்கிவிட்டோம். அந்த கிரிமினல்களை கைது செய்யும்படி புகார் தரவிருக்கிறேnம்" என குறிப்பிட்டுள்ளார்.
 
லிங்குசாமி இயக்கியிருக்கும் இப்படம் ஆகஸ்ட் 15 திரைக்கு வரவிருப்பது குறிப்பிடத்தக்கது.