வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 19 ஆகஸ்ட் 2014 (13:22 IST)

ஆர்யாவுடன் காதலா....? சிரிக்கும் அறிமுக நடிகை

ஆர்யா என்றாலே உடன் நடிக்கும் நடிகையை காதலிப்பார் என மீடியா ஒரு மாயத்தை உருவாக்கி அந்த மாய கம்பளத்தில் உலா வருகிறது. இதனால் அவரைப் பற்றிய பல செய்திகள் நாலாந்தர நகைச்சுவை துணுக்காக தோன்றுவதில் ஆச்சரியமில்லை.
அனுஷ்கா, நயன்தாரா என்று அரை டஜன் நடிகைகளை ஆர்யாவுடன் கோர்த்துவிட்டவர்கள் அடுத்து தேர்வு செய்திருப்பது தீபா சன்னிதி. யட்சன் படத்தில் ஆர்யாவுடன் நடித்து வருகிறவர்.
 
தீபா சன்னிதி ஏற்கனவே கன்னட, தெலுங்கு சினிமாவுக்கு அறிமுகமானவர். கன்னட லூசியாவின் தமிழ் ரீமேக்கில் சித்தார்த்துடன் நடித்து வருகிறார். அடுத்து இவர் ஒப்பந்தமானது விஷ்ணுவர்தனின் யட்சன். ஆர்யா, கிருஷ்ணா நடிக்கும் இந்தப் படத்தில் கிருஷ்ணாவுக்கு ஜோ‌டி ஸ்வாதி, ஆர்யாவுக்கு தீபா சன்னிதி.
ஆர்யாவின் ராசிப்படி இரண்டு ஷெட்யூல்டில் இணைந்து நடிக்கும் முன்பே இருவருக்குள்ளும் காதல் என சிலர் கிளப்பிவிட்டனர். இதை கேள்விப்பட்ட தீபா சன்னிதிக்கு வாயெல்லாம் பல். காரணம் யட்சன் படப்பிடிப்பிலேயே அவர் இல்லை. செப்டம்பர் மாதம்தான் படப்பிடிப்பில் கலந்து கொள்ளப் போகிறார். அதுவரை பெங்களூருவில் இருக்கப் போகிறவரைதான் ஆர்யாவுடன் சுற்றுகிறார் என்று வதந்தி கிளப்பி வருகின்றனர்.
 
தீபா சிரிக்காமல் என்ன செய்வார்.