1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (16:32 IST)

ஆம்பளயில் சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், கிரண்

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால், ஹன்சிகா நடிக்கும் ஆம்பள படத்தில் சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், கிரண் உள்ளிட்ட முன்னாள் நாயகிகள் நடிக்கயிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
 
சுந்தர். சி, விஷால் இணைந்து உருவாக்கிய மத கஜ ராஜா இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில் விஷாலின் விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் ஆம்பள படத்தை சுந்தர் சி. தொடங்கினார். விஷால், ஹன்சிகா நடிக்கும் இந்தப் படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.
 
முன்னாள் நாயகிகள் சிம்ரன், ரம்யா கிருஷ்ணன், கிரண் போன்றவர்களையும் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன.
 
2015 பொங்கலுக்கு படம் வெளியாகிறது.