1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: புதன், 23 ஜூலை 2014 (18:55 IST)

அரிமா நம்பியை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்யும் தாணு

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தாணு தயாரித்த அரிமா நம்பியை தாணுவே தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.
எனிமி ஆஃப் த ஸ்டேட், அப்செல்யூட் பவர், பார்ன் அல்டிமேட்டம் ஆகிய படங்களின் கூட்டுக் கலவையான அரிமா நம்பியை முருகதாஸின் அசிஸ்டெண்ட் ஆனந்த் சங்கர் இயக்கியிருந்தார். விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் நடித்திருந்தனர். கடந்த 4ஆம் தேதி வெளியான படம் இன்றும் சில இடங்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை படம் 12 கோடிகள் கலெக்ஷன் செய்துள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
 
இந்தப் படத்தை தெலுங்கு, இந்தியில் ரீமேக் செய்ய பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் யாருக்கும் படத்தின் ரீமேக் உரிமையை தாணு தரவில்லை. தெலுங்கு, இந்தியில் அவரே படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.