வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 16 ஜூன் 2014 (11:26 IST)

அஞ்சலியிடம் விசாரணை நடத்தப்படும் - இயக்குனர்கள் சங்கத் தலைவர் விக்ரமன்

மு.களஞ்சியத்தின் ஊர்சுற்றிப் புராணம் படத்தில் ஆரம்பத்தில் நடித்த அஞ்சலி அதன் பிறகு கால்ஷீட் தரவில்லை. அதனால் படத்தை முடிக்க முடியாத நிலையில் இருக்கிறார் களஞ்சியம். இது குறித்து அவர் இயக்குனர்கள் சங்கத்தில் புகார் தந்துள்ளார்.

அஞ்சலி காணாமல் போனதிலிருந்து தொடங்கியது இந்தப் பிரச்சனை. தன்னை தனது சித்தியும், இயக்குனர் களஞ்சியமும் டார்ச்சர் செய்வதாக அஞ்சலி குற்றஞ்சாட்டினார். அஞ்சலியின் இந்தப் பேச்சால் தனது கௌரவத்துக்கு களங்கம் ஏற்பட்டதாகக்கூறி அவர் மீது களஞ்சியம் வழக்குத் தொடர்ந்தார் களஞ்சியம். இவர்களின் சண்டை இன்னும் தீரவில்லை.
 
ஊர்சுற்றிப் புராணத்தை முடிக்க அஞ்சலி கால்ஷீட் தந்தேயாக வேண்டும் என்கிறார் களஞ்சியம். அவருக்கு கால்ஷீட் தரும் பேச்சுக்கே இடமில்லை என்கிறார் அஞ்சலி. இந்த விவகாரம் இயக்குனர்கள் சங்கத்திடம் வந்திருக்கும் நிலையில், அஞ்சலியிடன் இதுகுறித்து விசாரிக்க இருப்பதாக விக்ரமன் தெரிவித்தார். எந்த ஒரு நடிகரும் பாதியில் படத்திலிருந்து வெளியேற முடியாது. அதனால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை அவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார் விக்ரமன். 
 
அஞ்சலி தமிழ்ப் படங்களில் நடிக்க தடை விதிக்கப்பட்டதாக கூறப்படுவதை விக்ரமன் மறுத்தார். இதுவரை எந்த நடிகருக்கும் தடைவிதிக்கவில்லை என்றார்.
 
அஞ்சலியிடம் நடத்தப்படும் விசாரணைக்குப் பிறகே ஊர்சுற்றிப் புராணத்தின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.