1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி
Written By Webdunia
Last Modified: செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (18:00 IST)

அஜித் கெட்டப்பை மாற்றி... செட்டப்பை மாற்றி...

மங்காத்தாவில் அஜித்தின் சால்ட் அண்ட் பெப்பர் கெட்டப் அமர்க்களம். ஆரம்பத்திலும் அதே கெட்டப். ஓகே, அதுவும் பரவாயில்லை. வீரத்தில் தாடி தலைமுடி எல்லாம் சால்ட் அண்ட் பெப்பர் (சால்ட் கொஞ்சம் தூக்கல்). வேட்டிகட்டிய காட்சிகளில் ஓகே. ஆனால் பாடல் காட்சிகளில்...?
FILE

அறுபது வயசுக்காரர் கோட் அணிந்து மாறுவேஷம் போட்டது போல் ரசிகர்களுக்கே ஷாக்காகி விட்டது. கௌதம் மேனன் அதனை கவனிக்காமலா இருந்திருப்பார்?

அஜித்தை இயக்கும் புதிய படத்தில் சால்டுக்கும் பெப்பருக்கும் விடை தந்து புதிய ஹேர் ஸ்டைலில் அஜித்தை காட்டப் போகிறாராம். அடம்பிடிக்காமல் அல்டிமேட்டும் இதற்கு ஓகே சொல்லியிருக்கிறார்.
FILE

ரசிகர்கள் பட்டாசு வெடிக்க இந்த ஒரு மாற்றமே போதும்.