1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (16:18 IST)

யுவன் ஷங்கர் ராஜாவின் காதலர் தின பரிசு

யுவன் ஷங்கர் ராஜாவின் காதலர் தின பரிசு

யுவன் ஷங்கர் ராஜாவின் ரசிகர்கள் திகைத்து நிற்கிறார்கள். யுவனுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெற்ற இயக்குனர்கள் வரிசையாக அவரை கைகழுவி வருகிறார்கள். யுவனிடமிருந்து ஒரு ஹிட் கிடைத்தும் வருடங்களாகிறது.


 
 
இந்நிலையில், அவர்களை மகிழ்ச்சிப்படுத்தும் ஒரு செய்தி. காதலர் தினத்தில் யுவன் இசையமைத்த நீ எனத் தொடங்கும் பாடல் வெளியாகிறது.
 
குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஸ்வாதி நடித்திருக்கும் யாக்கை திரைப்படத்தில் வரும் இந்தப் பாடலை காதலர் தினத்தில் வெளியிடுகின்றனர். யுவனின் கம் பேக் பாடலாக இது அமையட்டும்.